தமிழகம் சினிமா

எத்தன படங்கள் வெளியானாலும் அசராமல் அசத்தும் தலயின் விஸ்வாசம்; மகிழ்ச்சியில் படக்குழுவினர்.!

Summary:

thala ajith - visvasam - continus running in theater

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகி  பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 உலகம் முழுவதும் வெளியான படம் விஸ்வாசம். 

இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களும் நிறைந்த இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.


 
மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் என்றும் இதனை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இப்படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்களும், படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா, தனது டுவிட்டரில் முக்கியப் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதாவது, 5 வாரமாக பழைய படங்களை மாற்ற, புதுப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 

ஆனால் ஒரு படம் மட்டும் மாறாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அது அஜித்தின் ‘விஸ்வாசம்’ மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ’ஆல் டைம் பிளாக் பஸ்டர்’ என்ற ஹேஸ்டேக் இட்டு பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. 
 


Advertisement