தல அஜித்தை விமர்சித்து முகநூலில் குறளரசன் பதிவா; டி.ஆர் விளக்கம்.!

thala Ajith - TR- simpu - kuralarasan


thala-ajith---tr--simpu---kuralarasan

தல அஜித்தை விமர்சித்து முகநூலில் கருத்துக்களை பதிவிட்டது குறளரசன் இல்லை என்று டி.ஆர் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, மாவீரன் கிட்டு, ராஜபாட்டை, ஜீனியஸ் ஆகிய படங்களை இயக்கியவர் சுசீந்திரன். ட்விட்டரில் அவர் பதிவிட்டிருந்த கருத்துகள் அஜித் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Thala ajith

அந்த பதிவில் “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். 

வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு ... உங்களுக்காக காத்திருக்கும் பல கோடி மக்களில் நானும் ஒருவன்...” என இயக்குனர் சுசீந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

Thala ajith

இந்தக் கருத்தை மையப்படுத்தி சிம்புவின் தம்பி குறளரசன் முகநூல் பக்கத்தில் அஜீத்தை கேலி செய்து கருத்தை பதிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த பதிவு குறளரசன் என்ற பெயருக்கு பதிலாக குரான் அரசன் டி.ராஜேந்தர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அப்பக்கத்தில் உள்ள பதிவில், எங்கப்பன் தான்யா அடுத்த முதல்வா் தீபா பேரவையுடன் சோ்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிம்பு தரப்பு, “குறளரசனின் கருத்து Kuran Arasan T.Rajendar என்கிற முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இது போலி கணக்கு. Kural Tr என்பதுதான் குறளரசனின் முகநூல் கணக்கு” என்று விளக்கம் கூறியுள்ளனர்.