"லவ் டுடே" ஹிந்தி ரீமேக்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா ?? சர்ப்ரைஸை வெளியிட்ட படக் குழு!

"லவ் டுடே" ஹிந்தி ரீமேக்... ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா ?? சர்ப்ரைஸை வெளியிட்ட படக் குழு!


tamil-superhit-film-love-today-hindi-remake-hero-and-he

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியாகி  மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் லவ் டுடே. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம்  வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இத்திரைப்படத்தினை  பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு கதாநாயகியாக இவானா  நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ் ராதிகா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்திருந்தனர்.

lovetoday

வித்தியாசமான காதல் கதையை கொண்ட இந்த திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. திரைப்படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அந்தத் தகவல்களின்படி பாலிவுட் சினிமா நடிகர்களின் வாரிசுகள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

lovetodayபாலிவுட் சினிமாவின் முன்னணி ஸ்டாரான அமீர்கானின் மகன் ஜுனைத் கான்  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் மறைந்த பழம்பெரும் நடிகையான ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர்  கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பமாகும் என தெரிகிறது.