அடுத்தடுத்து சிக்கிய தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள்.. வருமானவரித்துறை சோதனையில் பகீர்..!Tamil Cinema Industry Producer IT Raid

கடந்த சில நாட்களாகவே தயாரிப்பாளர்களின் வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலரின் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை செய்தனர். 

அத்துடன் மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

tamilnadu

இந்த நிலையில் கலைபுலி தாணு, அன்புச்செழியன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையின் மூலமாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 

அத்துடன் 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும், ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.