சினிமா

ப்பா.. வேற லெவல்தான்! கொரோனாவால் குண்டான தமன்னா இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா! சொக்கிப் போன ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் கேடி  என்ற படத்தில்  நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா.

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தில்  நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதனைத் தொடர்ந்து அவர் கல்லூரி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்தார். பின்னர் அவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக நவம்பர் ஸ்டோரி என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். சில காலங்களுக்கு முன் தமன்னாவின் அம்மா மற்றும் அப்பா இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின் தமன்னாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில்  அவர் வீட்டிலேயே முடங்கியதால், கடுமையான மருந்துகளை உட்கொண்டதால் தமன்னாவின் உடல் எடை நன்கு கூடியது.

இந்த நிலையில் அவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிக்கு பின் உடல் எடை குறைந்து செம ஸ்லிம்மாக, கிளாமராக மாறியுள்ளார். மேலும் அவர் போட்டோ ஷூட் நடத்திய  புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

    


Advertisement