படவாய்ப்புகள் குறைந்ததால் இப்படியா? திடீரென தமன்னா எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

படவாய்ப்புகள் குறைந்ததால் இப்படியா? திடீரென தமன்னா எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!



tamanna goes to act in webseries

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் முன்னணி நடைகற்களுடன் இணைந்து நடித்து பயங்கர பிசியாக உள்ளார். மேலும் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் அவர் இந்திய அளவில் பெருமளவில் பிரபலமானார்.

tamanna

மேலும் பிரபுதேவாவுடன் இணைந்து தமன்னா நடித்த தேவி படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. மேலும் தமன்னாவிற்கு படவாய்ப்புகள் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை தமன்னா முன்னணி நிறுவனம் ஒன்று பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கும் வெப்சீரிஸ்ஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த வெப்சீரிஸ் ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாக உள்ளததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.