சினிமா

லிப்லாக் முத்தம் கொடுப்பதில் இவர்தான் பெஸ்ட்.! பிரபல நடிகையின் பதிலால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

Summary:

swetha talk about liplock kiss

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரைப்படங்களைவிட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கே பெரும் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான  சன் டிவியில் பிற்பகலில் ஒளிபரப்பாகும் சீரியல் சந்திரலேகா. இதில் நடிகை ஸ்வேதா பாண்டேகர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் ஆழ்வார் படத்தில் நடிகர் அஜித்திற்கு தங்கையாக நடித்ததன்  மூலம் அறிமுகமானார்.  அதனை தொடர்ந்து ஸ்வீத வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, பயணங்கள் தொடரும், இதயம் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

shwetha bandekar க்கான பட முடிவு

இருப்பினும் பெருமளவில் பிரபலமாகாத அவர் சந்திரலேகா தொடரில் நடித்ததை   தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பெருமளவில் பிரபலமானார். மேலும் எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்வேதா அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

 இந்நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் சினிமாவில் சிறந்த லிப் லாக் முத்தம் கொடுப்பவர் எந்த நடிகர் என்ற கேள்வி எழுப்பிய நிலையில், அவர் சற்றும் யோசிக்காமல் விஜய் தேவரகொண்டா  என கூறி அசத்தியுள்ளார்.

vijay devarakonda க்கான பட முடிவு


Advertisement