பாலியல் புகார் தொடர்பாக அமலாபாலை போனில் மிரட்டிய இயக்குனர்!



susie-ganeshan-abused-amalapal

திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய தமிழ் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சுசி கணேசன். இயக்குனர் சுசி கணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் இயக்குனர் லீனா மணிமேகலை முதலில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து லீனா மணிமேகலைக்கு ஆதரவாக களமிறங்கிய அமலாபால் சுசிகணேசன் தனக்கும் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக புகார் அளித்தார்.

இதுகுறித்து அமலாபால் கூறும்போது, ‘‘சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே–2 படத்தில் நடித்தபோது, அவருடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் தொல்லைகள் என்று பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன்’’ என்றார். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத, சுசிகணேசனிடம் லீலா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பது எனக்கு புரிகிறது. எல்லா துறைகளில் இருந்தும் மீ டூவில் பதிவுகள் வெளிவர வேண்டும் என்றும்’’ தெரிவித்தார்.

susie ganeshan abused amalapal

இதனையடுத்து இந்த புகார்களை மறுத்து சுசிகணேசனுக்கு ஆதரவாக அவரது மனைவி மஞ்சரியும் களமிறங்கியுள்ளார் இவர்கள் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சுசி கணேசன் மற்றும் அவரது மனைவி மஞ்சரி இருவரும் அமலாபாலை தொடர்பு கொண்டு அவரை தவறாக பேசியும், மிரட்டியும் உள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமலாபால், "இயக்குனர் சுசிகணேசனும் அவரது மனைவி மஞ்சரியும் எனக்கு போன் செய்தார்கள். எனது நிலைமையை விளக்குவதற்காக நானும் போனை எடுத்தேன். சுசிகணேசன் மனைவியை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் சுசிகணேசன் என்னை மோசமாக திட்டி கேவலமாக பேசினார். இப்படி செய்து என்னை பயமுறுத்த பார்க்கிறார்’’ என்று பதிவிட்டுள்ளார்.