சினிமா

நடிகர் சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார்! அதிரடி குற்றசாட்டை முன்வைத்த அவரது தாய்மாமா! வெளியான அதிர்ச்சித் தகவல்!

Summary:

Sushanth uncle complaint sushant was murdered

கடந்த 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் கை போ சே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதனைத் தொடர்ந்து சுத்தேசி ரொமான்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே அவர் பெருமளவில் பிரபலமானார். பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். 

இந்நிலையில் அவர் நேற்று மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது இந்த திடீர் மரணம் இந்தியளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கடந்த ஒரு மாதமாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

 இந்நிலையில் சுஷாந்தின் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாய் வழி மாமா, சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பேயில்லை. அவரது சாவின் பின்னணியில் ஏதோ சதி உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement