சினிமா

போனில் வந்த துயர செய்தி! மகனின் மரணத்தால் உடல்நிலை மோசமாகி, நொறுங்கிபோன நடிகர் சுஷாந்தின் தந்தை!

Summary:

Sushanth father got illeness after hearing son dead

பாலிவுட் சினிமாவில் கை போ சே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீர தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. 

இந்தப் படத்தை தொடர்ந்து அவர் ராப்தா, வெல்கம் நியூயார்க், சிச்சோர், கேதார்நாத், டிரைவ் ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் அவருக்கு நல்ல  பெயரை பெற்றுத் தந்தன. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட தகவல் குறித்து போலீசார் பாட்னாவில் இருக்கும் அவரது தந்தையிடம் போனில் கூறியபோது,  அவரது தந்தை கிருஷ்ணா குமார் சிங் மயங்கி விழுந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மகனின் இறப்பு செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அதற்குள் அக்கம்பக்கத்தினர் பலரும் அவரது வீடுகளில் கூட துவங்கினர். 34 வயது இளம் நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய அளவில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement