சினிமா

என்ன ஆச்சு..? திடீரென அமேசான் ப்ரைமில் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் படம்..! இதுதான் காரணமா..?

நடிகர் சூர்யா நடித்து வெளியான "24" திரைப்படம்  கடந்த ஜூலை 16-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான நிலையில் திடீரெனெ அமேசான் ப்ரைம் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் 2016-ம் ஆண்டு வெளியானது "24" திரைப்படம். டைம் மெஷின் கதையை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

படத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தை விக்ரம் குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படம் கடந்த ஜூலை 16-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானதை அடுத்து சூர்யா ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில் "24" திரைப்படம் திடீரென அமேசான் ப்ரைம் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. உரிமம் தொடர்பான பிரச்சனையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்தநிலையில், படத்தின் ஆடியோ பிரச்னை காரணமாக நீக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படும் என்றும் தற்போது தகவல்கள்வெளியாகியுள்ளது.


Advertisement