
தல சம்மதித்தாள் அவருடன் கூட்டணி சேர தயார்.. தமிழ் திரையுலக பிரபலம் ஆர்வம்..!!
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித்க்கு அடுத்தபடியாக 90 காலகட்டத்தில் இருந்து ஒன்று வரை ஒரு முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘NGK’ படத்தில் நடித்து வருகிறார்.
தனக்கென்று தனிப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் சூர்யா பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், அவரது மனைவியான ஜோதிகாவும் தமிழின் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித்,விக்ரம் என்று பல நடிகர்களுடன் நடித்து விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர்.
அப்போது நடிகர் சூர்யாவிடம் ‘நீங்கள் விஜயுடன் சேர்ந்து நடித்து விட்டீர்கள் , எப்போது அஜித்துடன் சேர்ந்து நடிப்பீர்கள் ‘ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா "தல ஓகே சொன்னா உடனே பண்ணிடவேண்டியதுதான்" என கூற அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் ஆராவாரம் செய்ய துவங்கிவிட்டனர்.
நடிகர் சூர்யா, விஜய்யுடன் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்து விட்டார். அதே போல நடிகர் அஜித் விஜய்யுடனும் விக்ரமுடனமும் நடித்து விட்டார். ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்தும் சூர்யா- அஜித் கூட்டணியில் எந்த ஒரு படமும் அமையவில்லை. அப்படி அமைந்தால் அது மெகா ஹிட் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Advertisement
Advertisement