
Surya thanking tweet to director bharathiraja
கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ் மீரா மிதுன் பல முன்னணி திரைப்பிரபலங்கள் குறித்து கடுமையாக பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் அவர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் நெபடிசம் தயாரிப்புகள் என மிகவும் மோசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகள் குறித்தும் அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டிருந்தார். இது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இவ்வாறு சமூக வலைதளங்களில் நடிகர்கள் குறித்த அவதூறுகள் வரம்பு மீறி அதிகரித்துவரும் நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பதுபோல மீரா மிதுன் என்ற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார்.
சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என பல கருத்துக்களை கூறி கண்டனம் தெரிவித்திருந்தார்.
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. https://t.co/qR32iviTfO
— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
இந்நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்.சமூகம் பயன் பெற அன்பான ரசிகர்களே என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் எனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement