சினிமா

சூர்யா விடுத்த அன்பு கோரிக்கை.! உற்சாகத்தில் கைதட்டி ஆரவாரம் செய்த ரசிகர்கள்!!

Summary:

surya request to fans in madurai

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர் .இந்நிலையில் சூர்யா என்.ஜி.கே படத்தை தொடர்ந்து, லைகா நிறுவனம் தயாரிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில், உருவான காப்பான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் செப்டம்பர் 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அதனைதொடர்ந்து சூர்யா இறுதிசுற்று புகழ் இயக்குனர் சுதா கோங்குரா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் மதுரையில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அப்பொழுது அவர் ரசிகர்கள் முன், நான் பிதாமகன் படத்திற்கு பிறகு இப்பொழுதான் மதுரைக்கு வந்துள்ளேன்.  இங்கிருக்கும் அனைவரும் எனது சகோதர சகோதரிகளே. மேலும் எனது ரசிகர்கள் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை நன்றாக கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையிலும், தொழிலிலும் கவனம் செலுத்துங்கள்  என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.


Advertisement