சினிமா

கொரோனா பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யாவின் தற்போதைய நிலை என்ன..? வெளியான முக்கிய அறிவிப்பு..

Summary:

நடிகர் சூர்யா கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியு

நடிகர் சூர்யா கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடந்த 7 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தொடர்ந்து சிகிச்சைபெற்றுவந்த அவர், கொரோனா பாதிப்பு குணமடைந்து கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

ஆனால் அதன்பின்னரும் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தார் சூர்யா. இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது எனவும், சூர்யா கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டதாகவும், சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவன இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Advertisement