சினிமா

சூர்யாவின் அடுத்த படமான அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் அழகான நடிகை..! உறுதியான தகவல்கள்.! யார் தெரியுமா.?

Summary:

Surya next movie actress rashi khanna

சூர்யாவின் அடுத்த படத்தின் கதாநாயகி யார் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகிவந்தநிலையில் தற்போது ராஷி கண்ணா சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் படம் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் சூர்யா தனது அடுத்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சிவா ரஜினியை இயக்கம் வாய்ப்பு கிடைத்ததால் சூர்யாவை இயக்கும் படத்தை தள்ளிவைத்துவிட்டு தற்போது அண்ணாத்த படத்தில் பிஸியாகிவிட்டார். இதனால் மீண்டும் 6 வது முறையாக இயக்குனர் ஹரியுடன் கூட்டணி சேர்ந்தார் சூர்யா.

அருவா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு யார் கதாநாயகி என பல்வேறு பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில், ட்விட்டரில் #askraashi என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராஷிகண்ணா உங்களின் அடுத்த படங்கள் என்ன என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், அரண்மனை 3 மற்றும் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement