தமிழகம் சினிமா

நயன்தாராவுடன் 4வது முறையாக இணையும் பிரபல தமிழ் நடிகர்; யார் தெரியுமா?

Summary:

surya new tamil movie commeted actress nayanthara

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. 

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனை தொடர்ந்து தற்போது விஜய் 63, தர்பார் உள்ளிட்ட படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து பேசி வருகிறார்களாம். சூர்யா, நயன்தாரா இதற்கு முன்பு ‘கஜினி’, ‘ஆதவன்’, ‘மாசு என்கிற மாசிலாமணி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement