சினிமா

ஊரடங்கு முடியும் வரை இது தொடரும்! மீண்டும் களத்தில் இறங்கி சூர்யா ரசிகர்கள் செய்த காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!

Summary:

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருமளவில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனைத

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருமளவில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக பரவி வருகிறது. இந்த கொடிய தொற்றால் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்திலும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஏழை எளிய, மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்கள் உணவிற்கு கூட பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும் ஊரடங்கு முடியும் வரை அந்த மக்களுக்கு அவர்கள் உணவு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் கொரோனா முதல் அலையின் போதே உணவளிப்பது போன்ற பல உதவிகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement