சினிமா

சூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்? விளக்கமளித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை!

Summary:

நடிகர் சூர்யா சூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸாவது தள்ளிபோவது ஏன் என விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று.  இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ந்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளதாக அறிவுப்புகள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது அமேசான் வெளியிட்டுள்ள இந்த மாதத்திற்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யா, பட ரிலீஸாவதில் ஏன் தாமதம் என்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரரைப் போற்று  திரைப்படம் விமானத் துறையை பற்றியது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதாலும்,  உண்மையான விமானப்படை விமானங்களை பயன்படுத்தியதாலும் பல அனுமதிகளை பெற வேண்டியுள்ளது.

இன்னும் சில  தடையில்லா சான்றிதழ்களும் பெற வேண்டியுள்ளது. சூரரைப் போற்று  திரைப்படத்தின் கதை அனைவரையும் ஈர்க்கக் கூடியதாகவும், ஆர்வத்தை தூண்டக் கூடியதாகவும் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இப்படத்தின் வெளியீடு எதிர்பார்த்ததை விட அதிகம் நீட்டிக்கப்படுகிறது. ஆனால் வேறு வழி இல்லை.

என்னுடைய நலம் விரும்பிகள் இதை அன்புடனும், நம்பிக்கையுடனும் எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். விரைவில் ட்ரெய்லர் மற்றும் சில விஷயங்கள் குறித்த தகவல்களுடன் உங்களிடம் வருகிறோம் என கூறியுள்ளார்.

 

    


Advertisement