சினிமா

அட.. வேற லெவல்! நடிகர் சூர்யா மகள் தியா 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் என்னனு பார்த்தீங்களா!!

Summary:

அட.. வேற லெவல்! நடிகர் சூர்யா மகள் தியா 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் என்னனு பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் டாப் நடிகையாக வலம் வந்த ஜோதிகாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் இவர்களுக்கு தியா, தேவ் என இருபிள்ளைகள் உள்ளனர்.

தியா மற்றும் தேவ் இருவரும் இதுவரை சினிமாவில் முகம் காட்டியதில்லை. இதில் தியா கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். அதனை போலவே தேவ் படிப்பை தாண்டி கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக உள்ளார்.  சூர்யா மகள் தியா தற்போது 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

அதில் சூர்யாவின் மகள் தியா தமிழில் 95 மதிப்பெண், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்,கணிதத்தில் 100 மதிப்பெண், அறிவியலில் 98 மதிப்பெண் மற்றும் சமூக அறிவியலில் 95 மதிப்பெண் பெற்றுள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அதனை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 


Advertisement