சினிமா

பிக்பாஸ் பாலா மாதிரியே இருப்பார்னு சுரேஷ் தாத்தா கூறிய அவரது மகனை பார்த்திருக்கீங்களா! புகைப்படம் இதோ!

Summary:

பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 4வது சீசனில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. நடிகர், இயக்குனர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமையல் கில்லாடி என பன்முகத்திறமை கொண்டு விளங்கிய இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே வாக்குவாதம், மோதல் என பல சர்ச்சைகளை கிளப்பி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லை. 
மேலும் இவரால்தான் சண்டையே வருகிறது என்பது போலவும் கருத்துக்கள் பரவிவந்தது. ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக  நுழைந்த பிறகு அவரது ஆட்டம் குறைந்தது. பின்னர் குறைந்த வாக்குகளைப் பெற்று சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பாலாவை பார்த்தால் தனது மகனின் ஞாபகம் வருகிறது என அடிக்கடி கூறுவார். இந்த நிலையில் அவர் தற்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் ஆமாம் உங்களது மகன் பார்ப்பதற்கு பாலாவை போலதான் இருக்கிறார்.  ஆனால் இவர் அமைதியாக தெரிகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement