சினிமா

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தியா இது! இளவயதில் எப்படியிருக்கிறார் பார்த்தீர்களா! இணையத்தில் லீக்காகி தீயாய் பரவும் புகைப்படம் l!

Summary:

பிக்பாஸ் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தியின் இளவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் பிக்பாஸ் சீசன் 4ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 

சுரேஷ் சக்ரவர்த்தி தமிழில் வாக்குமூலம், கே பாலச்சந்தரின் இயக்கத்தில் அழகன், பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான வண்ணப்பூக்கள் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி எனக்குள் ஒருத்தி என்ற தொடரை எழுதி, இயக்கியதுடன் அதில் நடித்தும் உள்ளார். மேலும் யூடியூப் சேனல் தொடங்கி தனது சமையல் திறனையும் வெளிப்படுத்தி வந்தார்.

இவ்வாறு பன்முகத்திறமை கொண்டு விளங்கும் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் சகபோட்டியாளர்களுடன் வாக்குவாதம், மோதல் என சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி இளவயதில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டநிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement