தன்னை விட வயது குறைந்த காதலரை கரம்பிடித்த சூப்பர் சிங்கர் பிரபலம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

தன்னை விட வயது குறைந்த காதலரை கரம்பிடித்த சூப்பர் சிங்கர் பிரபலம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!


super-singer-malavika-marriage-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர்,ஜூனியர் என மாற்றி மாற்றி அனைத்து வயது தரப்பினருக்கும் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பாடகர்கள் உருவாகினர். அண்மையில் சூப்பர் சிங்கர் சீசன் 8 வெற்றிகரமாக முடிவடைந்தது. மேலும் விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் தொடங்கப்பட உள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் மாளவிகா சுந்தர். அவரது பாடல்கள் மக்களை பெருமளவில் கவர்ந்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு படங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. ஹிந்தியிலும் அவர் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

super singer

இந்நிலையில் மாளவிகா அண்மையில் விரைவில் தனக்கு திருமணமாகவிருப்பதாகவும், வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் தனது வருங்கால கணவர் தன்னை விட வயது குறைவானவர் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர்களது திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அத்தகைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

super singer