சினிமா

கொரோனோவிடமிருந்து தனது குழந்தைகளை காப்பாற்ற சன்னி லியோன் எடுத்த அதிரடி முடிவு! ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

Sunny leono flied to america for escape from corono

பாலிவுட் சினிமாவில் ஏராளமான கவர்ச்சி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன் இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.  இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தங்களை, குடும்பத்தை பாதுகாக்கவேண்டிய நிலையில் உள்ளனர். 

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் 3 குழந்தைகளுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு சென்றுள்ளார். இதுகுறித்து சன்னி லியோன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளை இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளியான கொரோனா வைரசிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என எண்ணினோம். அதனால் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் தனது கார்டனில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளோம். இங்கு தற்போது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் தனது தாய் இப்போது இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்றும் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சன்னி லியோன் எப்படி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றார் என பலருக்கும்  கேள்வி எழுந்தது. அதற்கு சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர், அரசின் KLN விமானத்தில் மும்பையில் இருந்து அமெரிக்கா வந்ததாக தெரிவித்துள்ளார்.


Advertisement