சினிமா

வாவ்!! வரும் தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் என்ன படம் தெரியுமா? டிஆர்பி எகுறப்போகுது!!

Summary:

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புத்தம் புது திரைப்படத்தை ஒளிபரப்புகி

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புத்தம் புது திரைப்படத்தை ஒளிபரப்புகிறது சன் தொலைக்காட்சி.

இந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகள் என்றால் அதில் சன் தொலைக்காட்சிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஒருகாலத்தில் இல்லத்தரசிகள் மட்டும் சீரியல் பார்த்து வந்த நிலையில், தற்போது இல்லத்தரசிகள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சீரியல் பார்க்க வைத்துவிட்டது சன் டிவி.

அதேநேரம் பண்டிகை என்றால் புத்தம் புது படங்களையும் ஒளிபரப்பி TRP யில் மாஸ் காட்டி வருகிறது சன் டிவி. அந்த வகையில் வரும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" படத்தை ஒளிபரப்புகிறது சன் டிவி.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


Advertisement