சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை சுந்தரி யார் தெரியுமா..? அட.. அவருக்குள் இவ்வளவு திறமையா.?

சன் டிவி சுந்தரி சீரியல் நடிகை சுந்தரி யார் தெரியுமா..? அட.. அவருக்குள் இவ்வளவு திறமையா.?


sun-tv-sundhari-serial-actress-gabrella-sellus-bio-deta

சன் டிவி புது சீரியல் சுந்தரி தொடரின் நாயகி குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. புது புது தொடர், வித்தியாசமான கதைக்களம் என என சிறுவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை சீரியல் பார்க்க வைத்த பெருமை சன் டிவிக்கு உண்டு. அந்தவகையில் தற்போது கிராமத்து மக்களை கவரும் வகையில் "சுந்தரி" என்ற புது தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது சன் டிவி.

Sun tv

கிராமத்தை சேர்ந்த சாதாரண பெண் ஒருவரின் வாழ்க்கை, அவரது போராட்டங்களை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரில், தொடரின் நாயகியாக நடிப்பவரின் பெயர் கேப்ரில்லா செல்லுஸ். திருச்சியை பூர்விகமாக கொண்ட இவர், முதன் முதலில் பிரபலமானது டிக் டாக் செயலி மூலம்தான்.

பல்வேறு விதமான டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மிகவும் வைரலான இவர், அதன்பின்னர் 20 கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்து, சிறந்த குறும்பட நடிகை என்ற விருதினையும் வாங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்திலும், செத்தும் ஆயிரம் பொன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

Sun tv

அதுமட்டும் இல்லாமல் மாடலிங் துறையிலும் கலக்கிவருகிறார் கேப்ரில்லா செல்லுஸ். இந்நிலையில்தான் தற்போது சன் டிவியில் சுந்தரி தொடரில் நடித்துவருகிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு தொடரிலும் போட்டியாளராக கலந்துகொண்டு, அதிலும் சாதித்து காட்டியுள்ளார் கேப்ரில்லா செல்லுஸ்.