சினிமா

எந்த ஒரு நடிகருக்காகவும் செய்யாததை ரஜினிக்காக செய்த சன் டிவி! என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?

Summary:

Sun tv special promotion for rajini petta movie

புது புது படங்கள், சீரியல்கள் என அன்றுமுதல் இன்றுவரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது சன் டிவி. தமிழ்நாடு மட்டும் இல்லாது, இந்திய அளவில் TRP இல் முதல் இடத்தில் உள்ளது சன் தொலைக்காட்சி. வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமே டிவி சீரியல்கள் பார்த்துவந்த நிலையில் இன்று இளைஞர்கள், இளம்பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்திவிட்டனர்.

இந்நிலையில் சன் டீவியின் மற்றொரு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் பேட்ட படத்தை தயாரித்திருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும் பேட்ட படம் நல்ல வசூலை பெற்றது.

பேட்ட படத்திற்கு சன் தொலைக்காட்சியும் தன்னால் முடிந்த வரை ப்ரோமோஷன் செய்துள்ளது. தற்போது இதன் அடுத்தகட்டமாக சன் டீவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் பேட்ட படத்தின் ப்ரோமோஷனை சேர்த்துள்ளனர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர்.

கல்யாண வீடு படத்தில், அனைவரும் பேட்ட படத்திற்கு செல்வதுபோலவும், படம் பார்த்துவிட்டு பேட்ட படம் சூப்பர் என சொல்வதும் பேட்ட படத்தின் ப்ரோமோஷனுக்கு சன் டிவி எடுத்துள்ள நல்ல முயற்சியை காட்டியுள்ளது. அதேபோல் அழகு சீரியலிலும் பேட்ட படத்தின் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

இதுவரை சன் பிக்சர்ஸ் எத்தனையோ படங்களை தயாரித்துள்ளது. ஆனால், எந்த ஹீரோவுக்கும் இல்லாத வகையில் ரஜினியின் பேட்ட படத்திற்கு மட்டும் புது புது வழிகளில் ப்ரோமோஷன் செய்துள்ளது சன் டிவி.


Advertisement