சினிமா

வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சன் டிவியில் என்ன படம் தெரியுமா..? டிஆர்பி எகிறபோகுது..

Summary:

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சன் தொலைக்காட்சியில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெகாஹிட் படம் ஒளிபரப்பாகவுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சன் தொலைக்காட்சியில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெகாஹிட் படம் ஒளிபரப்பாகவுள்ளது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி. இன்று இந்திய அளவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக சன் தொலைக்காட்சி இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் படங்கள், சீரியல்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள்தான் காரணம்.

இன்றைய சூழ்நிலையில் திரைக்கு வரும் படங்களை ஒருசில வாரங்கள் அல்லது மாதங்களிலையே பார்த்துவிடுவதற்கு OTT, போன் என பல்வேறு வசதிகள் வந்துவிட்டது. ஆனால் முன்பெல்லாம் திரைக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்கள் அந்த படத்தை எப்போடா சன் டிவியில் போடுவார்கள் என காத்துக்கிடந்த காலமெல்லாம் உண்டு.

அதனால் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் வருவது கிடையாது. ஆனாலும் ஒருசில படங்களை என்னதான் திரையரங்கில் பார்த்திருந்தாலும் கூட, அந்த படம் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது பார்க்க தவறுவது கிடையாது.

அப்பேற்பட்ட பல படங்களை இன்றுவரை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது சன் டிவி. இந்நிலையில் அதுபோன்ற பிரபலமான ஒரு படத்தைதான் இந்த வாரம் ஒளிபரப்புகிறது சன் டிவி. ஆம், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான தெறி படம் வரும் ஞாயிறு மாலை 6 . 30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.


Advertisement