சினிமா

சன் டிவி சித்தி 2 சீரியலில் அதிரடி மாற்றங்கள்..! நடிகர் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் மாற்றம்..! ராதிகா சரத்குமார் தகவல்..!

Summary:

Sun tv chithi serial casting change update

சன் தொலைக்காட்சியில் ஒலிபராகவிவந்த சித்தி 2 தொடரின் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மாற்றப்பட்டிருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தொலைக்காட்சி நிறுவனங்கள் பழைய தொடர்களை ஒளிபரப்பிவந்தது. இந்நிலையில் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இருப்பினும் கொரோனா அச்சம், வெளியூரில் இருக்கும் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில் உள்ள சிக்கல், சிலரின் உடல்நிலை போன்ற காரணங்களால் சில நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஒருசில கதாபாத்திரங்களில் நடித்த பழைய நடிகர்களை தூக்கிவிட்டு புது நடிகர்களை நடிக்கவைக்கும் முயற்சி நடந்துவருகிறது.

இந்நிலையில் ‘சித்தி 2’ சீரியல்களில் சில நடிகர்கள் மாற்றப்பட்டிருப்பதாக அத்தொடரில் நடிக்கும் நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நடிகர்களுக்கு பதிலாக வேறு சில நடிகர்களை நடிக்க வைக்கிறோம் எனவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ராதிகாகூறியுள்ளார் .

மேலும், சித்தி தொடரின் நடிகர், நடிகைகளுடன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ராதிகா. அதில், சித்தி 2 தொடரில் ராதிகாவுக்கு கணவனாக நடித்துவந்த நடிகர் பொன்வண்ணன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி இடம்பெற்றுள்ளார்.


Advertisement