பல வருட வழக்கத்தை முதல் முறையாக மாற்றிய சன் டிவி! என்ன தெரியுமா?

பல வருட வழக்கத்தை முதல் முறையாக மாற்றிய சன் டிவி! என்ன தெரியுமா?


Sun tv chanthrakumari serial time changed

இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிவருகிறது சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள், புது புது படங்கள்தான் காரணம். இதில் பெரிய பங்குவகிப்பது சீரியல்கள்.

முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்தனர். ஆனால், தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரும்பாலானோர் டிவி சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் பல வருடங்களாக சன் தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு தனது சிரியல்கள் மூலம் பக்க பலமாக இருந்தவர் ராதிகா சரத்குமார்.

Sun tv

இரவு 9.30 மணி என்றாலே ராதிகாவின் தொடர்தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்தது. சித்தி, வாணி ராணி, தற்போது சந்த்ரகுமாரி என சன் தொலைக்காட்சியில் முக்கிய இடத்தில் இருந்துவந்தார் ராதிகா. வாணி ராணி சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தநிலையில் சந்த்ரகுமாரி சீரியல் சில வாரங்களாக ஒளிபரப்பாகிவருகிறது.

இந்நிலையில் இதுவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ராதிகாவின் தொடர் முதல் முறையாக மாலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சன் டீவியின் இந்த திடீர் முடிவு ராதிகா ரசிகர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நேரம் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.