#SK16: அடுத்த படத்தில் மிகப்பெரிய கூட்டணியுடன் இணையும் சிவகார்த்திகேயன்! அதிகாரபூர்வ அறிவிப்பு

#SK16: அடுத்த படத்தில் மிகப்பெரிய கூட்டணியுடன் இணையும் சிவகார்த்திகேயன்! அதிகாரபூர்வ அறிவிப்பு


sun-pictures-produces-sivakarthikeyan-next-movie

நடிகர் சிவகார்த்திகேயனின் 16 வது படத்தினை #SK16 தயாரிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தினை இயக்குநர் பாண்டியராஜ் இயக்குகிறார். 

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் Mr . லோக்கல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

sivakarthikeyan

இந்நிலையில் Mr . லோக்கல் படத்தை அடுத்து இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கின்றார் சிவகார்த்திகேயன். இதுவரை அதிகாரப்பூர்வமாக பெயரிடப்படாத இந்த படத்திற்கு  'ஹீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். 

இதைப்பற்றியே முழு தகவலும் இன்னும் வெளியாகாத நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் #SK16 குறித்த புதிய தகவல் வெளியாகிவிட்டது. அதாவது சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினை தயாரிக்க உள்ளது. சிவகார்த்திகேயனை மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்த இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்தினை இயக்கவுள்ளார்.