மிக்ஜாங் புயல் நிவாரண பணிகள்: முதல்வரிடம் ரூ.5 கோடி வழங்கிய சன் குழுமம்.!Sun Network Chairman Kalanidhi Maran Gives Rs 5 Crore to TN Govt For MIchaung Cyclone Welfare Process 

 

சென்னையை தாக்கிய மிக்ஜாங் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப தொடங்கியுள்ளது. 

தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு மக்கள் நிதிஉதவி தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, பலரும் அரசுக்கு நிவாரண பணிகளுக்காக நிதிஉதவி அளித்து வருகிறார்கள். 

திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சியினர், முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அடுத்தடுத்து தங்களால் இயன்ற தொகையை அரசிடம் வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், சன் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினிடம் ரூ.5 கோடிக்கான காசோலையை வெள்ள நிவாரண பணிகளுக்காக வழங்கினர்.