சினிமா

புது தொலைக்காட்சி தொடங்குகிறது சன் டிவி நிறுவனம்! எப்போ ஒளிபரப்பு தெரியுமா?

Summary:

Sun bangla tv channel for bengali language launching

இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. மேலும் கடந்த சில வருடங்களாக TRP இல் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது சன் டிவி. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, கனடா, மலையாளம் என பழமொழிகளில் பல பெயர்களில் உள்ளது சன் தொலைக்காட்சி.

செய்தி பார்ப்பதற்காக ஓன்று, பாட்கள் பார்ப்பதற்காக ஓன்று, படம் பார்ப்பதற்காக ஓன்று என பலவிதமான சேனல்களை கொண்டுள்ளது சன் நிறுவனம். மேலும், சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது

 

இந்நிலையில் சன் பங்களா என்ற பெயரில் பெங்காலியில் புது டிவி ஒன்றை தொடங்குகிறது சன் நிறுவனம். இதன் ஒளிபரப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெங்காலியில் தொடங்கியதுபோல விரைவில் மராத்தியில் சன் நிறுவனம் தனது தொலைக்காட்சி சேனல்களை தொடங்கவுள்ளது.


Advertisement