சினிமா

மிரளவைக்கும் புதிய அவதாரம் எடுத்த அகிலஉலக சூப்பர்ஸ்டார்.! நடுங்கவைக்கு மாஸ் லுக் இதோ!!

Summary:

SUMI MOVIE FIRST LOOK POSTER RELEASED

துவக்கத்தில் மிர்ச்சி ரேடியோ ஸ்டேஷனில் ஆர்.ஜே வாக பணியாற்றி வந்தவர் சிவா. அதனை தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவர் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28  திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து அவர்  சரோஜா, தமிழ்ப்படம், கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தனது காமெடியான பேச்சால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப்படம் 2  ரசிகர்களையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Mirchi Shiva with real Sumo wrestler Yoshinori Tashiro picture goes viral

இதனை தொடர்ந்து சிவா தற்போது இயக்குனர் எஸ்.பி.ஹொசிமன் இயக்கி வரும் சுமோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதில் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் சிவாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 


Advertisement