பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திவாகர் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி...
என்னது பிக்பாஸ் பவா செல்லத்துரைக்கு இவ்வளவு அழகான குடும்பமா.. வெளியான புகைப்படம்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சேனலில் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டு வருகிறார். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கப்பட்டு ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து சண்டையும் சச்சரவுமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் களம் இறக்கப்பட்ட 18 போட்டியாளர்களில் ஒருவராக வந்தவர் எழுத்தாளர் பவா செல்லத்துரை. இவர் எழுத்தாளர் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் நடித்த நடிகரும் ஆவார்.
இந்நிலையில் பவா செல்லத்துறை தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.