சினிமா

முன்னணி சினிமா புகைப்பட கலைஞர் சாலை விபத்தில் மரணம். சினிமா துறையினர் அதிர்ச்சி.

Summary:

Still siva died in road accident

தமிழ் சினிமாவில் பல முன்ணனி நடிகர்களின் படங்களில் புகைப்பட கலைஞராக பணியாற்றியவர் ஸ்டில்ஸ் சிவா. இதுவரை பல்வேறு படங்களில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய இவர் இன்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

இயக்குனர் ராஜ் கபூர் இயக்கிவரும் பிரபல தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் ஒளிப்பதிவை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. அவர் உடல் இப்போது தேனி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது அகால மரணம் சினிமா துறையினரை அதிர்ச்சியாகியுள்ளது. மனோபாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் அதிர்ச்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement