சினிமா

சூர்யா ரசிகர்களுக்கு செம குஷியான செய்தி! பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சூரரைப் போற்று பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Summary:

சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ந்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளதாக அறிவுப்புகள் வெளியானது.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால், பல அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. மேலும் சில  தடையில்லா சான்றிதழ்களும் பெற வேண்டியுள்ளது என கூறப்பட்டு ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் சூரரைப்போற்று திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது படத்தின் ட்ரைலரும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement