அதுக்குள்ள சன் டிவியில் சூரரைப்போற்று திரைப்படம்..! சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி..!

அதுக்குள்ள சன் டிவியில் சூரரைப்போற்று திரைப்படம்..! சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி..!


Sooraraai potru in sun tv on coming pongal

2021 பொங்கல் பண்டிகையில் சூரரை போற்று திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளநிலையில் வேலைகள் முடிந்து திரைக்கு வரமால் காத்திருக்கும் படங்களின் பட்டியல் அதிகரித்துள்ளது. இதில் சூர்யா நடிப்பில் உருவான சூரரை போற்று திரைப்படமும் அடங்கும். இந்நிலையில்தான் இந்த படத்தை அமேசான் பிரைமில் வெளியிடப்போவதாக சூர்யா அறிவித்திருந்தார்.

என்னதான்  படம் வெளியானாலும் தியேட்டரில் பார்க்கும் அனுபவம் அமேசான் பிரைமில் கிடைக்காது. எனவே, ஓடிடி வேண்டாம். தியேட்டரில் ரிலீஸ் பண்ணுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். ஆனாலும் படம் அடுத்த மாதம் அமேசானில் வெளியாக உள்ளது. இந்த படத்தை அமேசான் நிறுவனம் ௬௦ கோடி விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

soorarai potru

இந்நிலையில் 2021 பொங்கல் பண்டிகையில் சூரரை போற்று திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை ரூ.15 கோடி விலைக்கு சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாகவும், 2021 பொங்கல் பண்டிகையில் இப்படம் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

தியேட்டரில் வெளியாகி மூன்றே மாதத்தில் சன் தொலைக்காட்சியில் இப்படம் வெளியாவது சூர்யா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.