நம்ம கருத்து கந்தசாமி செய்த காரியத்தால் வச்சு செய்யும் நெட்டிசன்கள், என்ன செய்தார்னு நீங்களே பாருங்க.!social network people teased vivek

தமிழ் சினிமாவில் கருத்து கூறியே தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை விவேக், அவர் எந்த கட்சியில் நடித்தாலும் இறுதியில் அது குறித்து ஏதாவது கருத்து ஒன்றை கூறிவிடுவார்.

எப்போதும் முடிந்தவரை தன்னுடைய படங்களில் வசனங்கள் மூலம் மூடநம்பிக்கைளை முற்றிலும் நீக்கும் வகையில் பேசுவார்.

இந்நிலையில் நடிகர் விவேக் சமீபத்தில் திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் 144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்பகரணி விழாவில் கலந்து கொண்டு வேடம் ஓதியபடியே ஆற்றில் குளித்தார்.

இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியது. 

இந்நிலையில் இதை பார்த்த நெட்டிசன்கள்  “எல்லாநாளும் ஓடுற அதே தண்ணி தானடா இப்பவும் ஓடுது. இப்ப மட்டும் எப்பிடிடா புனித நீராகும். ஃபன்னி பீப்புள்ஸ்” என்று அவருடைய புகைப்படத்தை வைத்து கிண்டல் செய்துள்ளனர் .மேலும் இதற்கு விவேக்,  கால் நூற்றாண்டுக்கு(25ஆண்டு) முன் நிலைமை வேறு. அப்போது புவி வெப்பமயமாதல், பிளாஸ்டிக் மற்றும் தண்ணீர் மாசுபாடு  கிடையாது. ஆற்று மணல் திருட்டும் கிடையாது.ஆனால் ஆறுகளைப் பாதுகாக்கும் அவசியம் இப்போது உள்ளது.
எனவே  ஆறுகளை பாதுகாப்பதற்காகத்தான் இதில் கலந்துகொண்டேன் என்று தன்னுடைய டிவிட்டர்பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.