நடிகை சினேகாவின் மகனா இது? இப்படி வளர்ந்துட்டாரே! அம்மாவுடன் கொடுத்த அசத்தலான போஸை பார்த்தீர்களா!
நடிகை சினேகா அவரது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதனை தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், வசீகரா என தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விகான் என்ற 5 வயது ஆண் குழந்தை இருந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆத்யந்தா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இரண்டாவது குழந்தைக்கு பிறகு சினேகா சற்று உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும் உடல் எடையை குறைப்பதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சினேகா ஒர்க்கவுட் முடித்தவுடன் தனது மகனுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.