40 வயசிலும் அழகு அள்ளுதே! கண்ணைக் கவரும் உடையில் நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்கள்!!

40 வயசிலும் அழகு அள்ளுதே! கண்ணைக் கவரும் உடையில் நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்கள்!!


snega-latest-photo-viral-vs5rqr

தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இவரை புன்னகை இளவரசி என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வந்தனர்.

சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் சினேகா தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கண்ணைக் கவரும் ஊதா நிறத்தில் கோட் சூட் போன்ற உடை அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.