விஸ்வாசம் பார்க்க சென்று சிறுவனுக்கு இப்படியொரு துயரமா? வைரலாகும் கண்ணீர் சிந்தும் வீடியோ!

விஸ்வாசம் பார்க்க சென்று சிறுவனுக்கு இப்படியொரு துயரமா? வைரலாகும் கண்ணீர் சிந்தும் வீடியோ!


small boy crying while watching viswasam

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து 4-வது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார் சிவா. 

அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களுடன் நிறைந்துள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய தரமான படம் இது என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

viswasam

.படத்தின் முதல் பாதி மிகவும் கலகலப்பாகவும், இரண்டாம் பாதி பார்ப்போர் மனதை உருக்கும் வகையில் கண்ணீர் சிந்த வைப்பதாகவும்  ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஸ்வாசம் படம் பார்க்க சென்ற சிறுவன் ஒருவன், படத்தின் உருக்கமான காட்சிகளை கண்டு  தனது தந்தையின் மடியில் அமர்ந்துகொண்டு கதறி அழுதுள்ளான்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.