சிவகார்த்திகேயனின் SK 20; ஷூட்டிங் தொடங்கியாச்சு.! அட.. யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா!!



sk-20-shooting-starting-today

ஆரம்ப காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாபெரும் வரவேற்பு இருக்கும்.

அவர் இறுதியாக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ”டான்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக SK20 என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜதி ரத்னலு படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு டைரக்டர் அனுதீப் இயக்குகிறார்.

sivakarthickeyan

கலையரசு மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தின் ஷுட்டிங் இன்று காரைக்குடியில்  பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் நவீன் பாலீசெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இந்த படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

sivakarthickeyan