
sjsuryahnext film with bavanishankar
நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்தார் எஸ்.ஜே.சூர்யா.இயக்குனராக புகழ் பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இதையடுத்து இறவக்கலாம் ,சர்கார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.அவரது நடிப்பில் வெளியான இறைவி, ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் அவரது நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என ரசிங்கர்களும் விமர்சகர்களும் கூறினார்.இவரது வில்லன் கதாபாத்திரம் மிகவும் நல்ல விமர்சனம் வந்தது.அமிதாபச்சனுடன் உயர்ந்த மனிதன் படத்திலும் நடிக்கிறார்.
இவர் அடுத்ததாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.அப்படத்தை மாயா, மாநகரம் படத்தை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டூடியோ தயாரிக்கிறது.மேலும் இப்படத்தினை ஒரு நாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் வெங்கட் இயக்க உள்ளார்.இப்படத்தில் நடிக்கும் நடிகை ப்ரியா பவானிசங்கர். விஜய் டிவி சீரியல் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நாயகியாக நடித்து பிறகு வெள்ளித்திரையில் மேயதா மான் திரைப்படம் மூலம் நடிகை ஆனார் பிறகு நடிகர் கார்த்திக் உடன் கடைகுட்டி சிங்கம் படத்தில் நடித்தார்.நல்ல வசூல் பெற்றது. இந்த இரண்டு படங்களில் நல்ல கதை எடுத்து நடிக்கும் நடிகை என்று பெயர் பெற்றார்.
இந்த நிலையில், எஸ். ஜே. சூர்யா பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மான்ஸ்டர் எனப் பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தின் டைட்டில் அனிமேஷன் வீடியோவை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார். இது ஒரு குடும்ப பொழுதுபோக்குச் சித்திரம் என்று சொன்னால் அது க்ளிஷேவாக இருக்கும். இது குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருந்தாலும், நாங்கள் வேறு வகையில் எடுத்திருக்கிறோம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உண்டு. எஸ். ஜே.சூர்யா இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் எஸ். ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரியாவுக்கும் கதைக்கும் தொடர்பிருக்காது. ஆனால் கதை அவரைச் சுற்றியே நடக்கும் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். மேலும் மான்ஸ்டர் என்ற பெயருக்கான அர்த்தத்தை நீங்கள் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என அவர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். படத்தின் 60 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டதாம். விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவும், விஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement