
Summary:
sivakumar bahaviour while youngman taking selfie
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கியவர் சிவகுமார்.நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையான அவர் தற்போதும் பிரபலமாக உள்ளார்.
இந்நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
அவர்களில் ஒரு இளைஞர் சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் யாரும் எதிர்பாராத வேளையில் அந்த இளைஞனின் போனை தட்டி விட்டார்.
Whyyy??? 😐 pic.twitter.com/w9HAYKTUvF
— TC (@TrollCinemaOff) 29 October 2018
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த இளைஞன் செய்வதறியாது விழிபிதுங்கி யாரிடமோ இதுகுறித்து கூறி கொண்டிருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement