சினிமா

அதை எடுக்கவே கூடாது! அட.. என்ன நடிகர் சிவகார்த்திகேயன் இப்படி சொல்லிட்டாரே! அப்போ கிடையாதா??

Summary:

அதை எடுக்கவே கூடாது! அட.. என்ன நடிகர் சிவகார்த்திகேயன் இப்படி சொல்லிட்டாரே! அப்போ கிடையாதா??

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு ரசிகர்களை பெரிதும் கவர்ந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.  2013 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். 

இதில் ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் சூரி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டாகி படத்தின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. முழுவதும் காமெடி நிறைந்து கலகலப்பாக சென்ற இப்படம் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 9ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இதன் விளம்பரத்திற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, அவரது நடிப்பில் வெளிவந்து ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

 அதற்கு சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்ற பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அப்படம் எங்களை அறியாமலே மிகவும் ஜாலியாக எடுத்த படம். அதனை திரும்பவும் எடுக்க முடியாது. ரெமோ படத்தையும் தொடர முடியாது. ஆனால் அப்படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை பயன்படுத்தி வேறு ஒரு படத்தை வேண்டுமானால் எடுக்கலாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 


Advertisement