அந்த படத்தில் நடித்ததுதான் நான் செய்த பெரிய தவறு! நடிகர் சிவகார்த்திகேயன்!

அந்த படத்தில் நடித்ததுதான் நான் செய்த பெரிய தவறு! நடிகர் சிவகார்த்திகேயன்!


sivakarthikeyan-talks-about-mister-local-movie

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது திறமையாலும், விடா முயற்சியாலும் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகர்களில் இவரும் ஒருவர். குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள், பெரியவர்கள் வரை இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

sivakarthikeyan

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்தது பற்றி கூறியுள்ளார். இயக்குனர் ராஜேஷை எனக்கு மிகவும் பிடிக்கும், ஓகே ஓகே, சிவாமனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற சூப்பர் படங்களை கொடுத்தவர்.

நான் இருந்த ஒருசில சூழ்நிலை காரணமாக மிஸ்டர் லோக்கல் படத்தின் கதையில் நடித்துவிட்டேன். நான் ராஜேஷிடம் வேறு கதை கேட்டிருக்க வேண்டும். மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்ததுதான் நான் செய்த தவறு என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.