ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோன சிவகார்த்திகேயன்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.?Sivakarthikeyan latest look for his next movie

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் முதன்முதலில் சின்ன திரையில் தொகுப்பாளராக பணியாற்றினார். பின் தனது நடிப்பு திறமையின் மூலம் முதன் முதலில் 'மெரினா' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

Siva

இப்படம் வெற்றி பெற்றாலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கு பின்பு பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயனை குறித்து சர்ச்சையாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது.

Siva

ஆனால் இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் சிவகார்த்திகேயன் தனது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவருடைய 'அயலான்' திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு பின்பு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ் கே 21 நடித்துள்ளார். இப்படத்திற்காக ஸ்கூல் பையன் தோற்றத்தில் சிவகார்த்திகேயனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு எஸ் கே 21 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.