சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த படத்தின் தலைப்பு இதுவா? செம மாஸ்!!

Summary:

sivakarthickeyen next movie title

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக அறிமுகமாகி, தனது கடின உழைப்பாலும் தீவிர முயற்சியாலும் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கென  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

 மேலும் இவரது படங்கள் அனைத்திற்கும் பெரும் வரவேற்பு உள்ளது. வெற்றி நாயகனாக வலம் கொண்டிருக்கும்  சிவகார்த்திகேயன் அடுத்ததாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.  இவர் புதிய இளம் நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார்.

sivakarthikeyan க்கான பட முடிவு

மேலும் முதன்முதலாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ்  இயக்கத்தில் உருவாகிய கனா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து ரியோ நடிப்பில்  உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்நிலையில் தற்பொழுது சிவகார்த்திகேயன் மூன்றாவது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இயக்குனர் அருண் பிரபு இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் வாழ் என பெயரிடப்பட்ட  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Advertisement