ரியோ வீட்டு விசேஷத்திற்கு சர்ப்ரைஸாக சென்று உற்சாகத்தில் மூழ்கடித்த பிரபல நடிகர்! வீடியோ இதோ!sivakarthickeyan-participate

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக இருந்து,  தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். 

 அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ரியோ சத்ரியன் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

shruthi rio

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரியோ ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்ருதி தற்போது கர்ப்பமாக உள்ளார். 

மேலும் ஸ்ருதியின் வளைகாப்பு சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் நெருக்கமானவர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கலந்துகொண்டு இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Rio Raj-Sruthi (@rioraj_sruthi) on